முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளவதற்கு புதிய சட்ட விதிமுறை

முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளவதற்கு புதிய சட்ட விதிமுறை

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2017 | 9:06 am

முச்சக்கர வண்டிக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு போக்குவரத்து தொடர்டபான தேசிய சபையின் பயிற்சி அத்தாட்சி பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 அம் திகதியிலிருந்து இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் செயலாளர் டொக்டர் சிசர கோத்தாகொட தெரிவித்தார்.

ஆகவே சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இந்த பயிற்சி அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்த பின்னர் போக்குவரத்து தொடர்பான தேசிய சபையினால் மேற்கொள்ப்படும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

வாரத்திற்கு 200 இற்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்கின்ற போதிலும் அவர்களில் முச்சக்கர வண்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பயிற்சி நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும் என போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்