ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2017 | 7:08 am

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏழு மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின், மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவுப் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார்.

நுவரெலிய மாவட்டத்தில் கொத்மலை மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக
மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவு பணிப்பாளர் கூறினார்.

அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மககள் அவதானமாக செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்