அதிகளவான கார்பன் வெளியேற்றம் பவளப்பாறைகளின் அழிவிற்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

அதிகளவான கார்பன் வெளியேற்றம் பவளப்பாறைகளின் அழிவிற்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

அதிகளவான கார்பன் வெளியேற்றம் பவளப்பாறைகளின் அழிவிற்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2017 | 1:08 pm

தற்போதைய காலகட்டத்தில் அதிகளவான கார்பன் வெளியேற்றம் பவளப்பாறைகளின் அழிவிற்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் மாறி வெளுத்துப் போயுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலைமையில், கார்பன் வெளியேற்றம் தொடருமானால், அதிகமாக பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப் போகும் நிலை தோன்றலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கார்பன் வெளியேற்றத்தால் மட்டுமல்லாமல் ஒருவகை நட்சத்திர மீன்களாலும் பவளப் பாறைகள் சேதப்படுத்தப்படுகின்றன.

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள் மிகப்பெரிய அளவில் விரைவாக தங்களை மாற்றியமைத்து கொள்ளக்கூடிய திறனை வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அமைப்புக்களின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று சஞ்சிகை ஒன்றில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவளப் பாறைகள் மட்டுமன்றி இயற்கையை பாதுகாக்க வேண்டுமெனின் மிகவும் குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்திற்கு விரைவில் மாற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பாரிஸ் ‘பருவநிலை மாற்ற ஒப்பந்தம்’ போன்ற சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்