வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 7:15 pm

வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கண்காணித்தார்.

புலத்சிங்ஹல, யடகம்பிட்டிய, நாகஹதொல உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி இன்று சென்றிருந்தார்.

அனரத்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை கண்காணித்த ஜனாதிபதி, சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த சிரமதானத்திலும் கலந்துகொண்டார்.

இந்த சிரமதானத்திற்கு இராணுவ உறுப்பினர்கள் மற்றும் சீனாவின் நிவாரணக் குழுவினரும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இதேவேளை, பாஹியங்கல மலையில் ஏற்பட்ட மண்ரிவால் வௌ்ள அபாயத்தை எதிர்கொண்ட நாகஹதொல பகுதியையும் கண்காணித்த ஜனாதிபதி, இது தொடர்பில் விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மண் சரிவினால் தடைப்பட்ட நாகஹதொல ஆற்றை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளார்.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்ளைச் சேர்ந்த பிள்ளைகளை இலக்காக கொண்டு விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஏனைய தேவைகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தப் பகுதிகளில் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கு ஏற்ற காணிகளை வழங்குவது மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

பின்னர் புலத்சிங்ஹல யட்டகம்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்களுக்கு ஜனாதிபதி உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்