வௌ்ளம், மண்சரிவால் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

வௌ்ளம், மண்சரிவால் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 7:36 pm

சீரற்ற வானிலையால் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்சரிவு அபாயம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் மிகுந்தஅச்சத்திற்கு மத்தியிலேயே பல கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கண்டி மடொல் கெலே உனனகல பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.

இதனால் இங்கு 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அச்சத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர்.

கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும், இதற்கான தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கண்டி – மடுல்கெலே – உனனகல கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய வண்ணமுள்ளனர்.

வௌ்ளம் மற்றும் மண்சரிவின் பின்னர் மக்கள் வீடு திரும்பியுள்ள போதிலும் சில பகுதிகளில் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு மத்தியிலே வாழ்கின்றனர்.

களுத்துறை புலத்சிங்கல பிரதேச செயலகப் பிரிவில் நாஹல்ல பகுதியில் அண்மையில் மண்சரிவு ஏற்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் 11 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

காலி மாபகலம மத்திய கல்லூரி, அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால் சேதமடைந்துள்ளது.

இதேவேளை காலி உடுகம நாகொட கனிஷ்ட வித்தியாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

மாபலகம கும்புருஹேன பிரதேசத்தின் வீடொன்று வௌ்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்