வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 1:30 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தெற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங்காணப்பட்டுள்னர்.

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,610 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 2,994 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8,324 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 4,256 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தெற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்