யாழில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவர் கைது

யாழில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 8:01 pm

யாழ்ப்பாணத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை முகவர்களாக தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த முன்னணி குடிநீர் போத்தல் விற்பனை நிறுவனமொன்றின் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 இற்கும் மேற்பட்டவர்களிடம் இவர்கள் பணத்தை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த நபர்களை பிடித்துள்ளனர்.

தமது மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளத்தருமாறு பல சந்தர்ப்பங்களில் கோரிய போதும் அது தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு குறித்த இருவரையும் வரவழைத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்யதுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்