மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 1:03 pm

கொழும்பு – 15 மட்டக்குளி ஜூப்லி மாவத்தையில் இன்று (05) பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் முச்சக்கர வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி சமித்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது குறித்த நபருடன் அவருடைய மனைவியும், குழந்தையும் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர்,எனினும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்