பளையில் பொலிஸார் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிணையில் விடுவிப்பு

பளையில் பொலிஸார் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிணையில் விடுவிப்பு

பளையில் பொலிஸார் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 11:05 am

கிளிநொச்சி பளை பகுதியில் பொலிஸாரை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரை இலக்கு வைத்து பளை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று முந்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரை கிளிநொச்சி பதில் நீதவான் சிவபால சுப்ரமணியம் முன்னிலையில் நேற்று (04) மாலை ஆஜர்படுத்திய போது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பளை கச்சார்வெளி பகுதியில் பொலிஸ் ரோந்து சேவை வாகனமொன்றை இலக்குவைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்தில் நான்கு பொலிஸார் இருந்தபோதிலும் அவர்களுக்கு இதன்போது பாதிப்பு ஏற்படவில்லை.

வாகனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் மூன்று தடவைகள் சுடப்பட்டுள்ளதுடன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது துப்பாக்கியின் ஒரு பகுதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்