நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 14,000 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 14,000 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 12:39 pm

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 14,842 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் 2,313 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,529 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தம் காரணமாக 212 பேர் உயிரிழந்துள்ளதுடன், 131 பேர் காயமடைந்துள்ளதாகவும், 79 பேர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்