நந்திக்கடலில் மீன்கள் இறப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது

நந்திக்கடலில் மீன்கள் இறப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது

நந்திக்கடலில் மீன்கள் இறப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 10:52 am

ஒட்சிசன் குறைப்பாடே நந்திக்கடல் களப்பில் மீன்கள் இறப்பதற்கான காரணம் என நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில், நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளமை மற்றுமொரு காரணம் எனவும் நாரா நிறுவனத்தின் சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோஷன் விக்ரமஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நந்திகடல் பகுதியில் ஓரளவு மழை பெய்தமையால் ஏற்பட்ட குழப்ப நிலைக் காரணமாக மீன்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நண்டுகள் இறக்கவில்லை எனவும் நாரா நிறுவனத்தின் சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோஷன் விக்ரமஆராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் கடந்த சில தினங்களாக இறந்த நிலையில் இலட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்