சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 1:48 pm

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

வர்த்தக நிலையங்களில் 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை 8 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிலைமை காரணமாக தங்களின் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தங்களுக்கு 15,000 தொடக்கம் 20,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது விற்பனை விலை 8 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்