ரஜினியின் 2.0 படம் 15 மொழிகளில் வெளியீடு

ரஜினியின் 2.0 படம் 15 மொழிகளில் வெளியீடு

ரஜினியின் 2.0 படம் 15 மொழிகளில் வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2017 | 4:41 pm

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன, இதில் எராளமான ஹொலிவுட் நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

400 கோடி ரூபா செலவில் தயாராகி வரும் இதை அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகள் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது ‘பாகுபலி’, படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இது போல் பல்வேறு நாடுகளில் சாதனை படைத்த ‘தங்கல்’ படம் தற்போது சீனாவிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

‘2.0’ படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10,000 அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ், இந்தியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உட்பட 15 மொழிகளில் 100 இற்கும் அதிகமான நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

ஹொலிவுட் படத்துக்கு இணையான முதல் இந்திய படம் இது என்று சொல்லும் வகையில் ‘2.0’ தயாராகி வருகிறது.

இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்