பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 6 பேர் பலி

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 6 பேர் பலி

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 6 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2017 | 1:37 pm

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ சந்தைப் பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களையடுத்து பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதசாரிகள் கூட்டத்துக்குள் வௌ்ளை நிற வேனொன்று நுழைந்து பாதசாரிகள் மீது மோதியுள்ளதுடன், வேனிலிருந்து இறங்கிய அடையாளந் தெரியாதோர், பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 48 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லண்டன் பிரிட்ஜ் ரயில்வே நிலையம் மூடப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு வரை லண்டன் பிரிட்ஜ் மூடப்படும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ், பரோ வீதி, சவுத்வர்க் வீதி, தேம்ஸ் வீதி, கிங் வில்லியம் வீதி, கெனன் வீதி ஆகியன மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்ஸ்ஹால் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கும் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்