73 ஆவது பிரெட்பி கேடயம்: இரண்டாம் கட்டத்திலும் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றி

73 ஆவது பிரெட்பி கேடயம்: இரண்டாம் கட்டத்திலும் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2017 | 8:50 pm

இலங்கை பாடசாலைகளுக்கான ரக்பி வரலாற்றில் அதிபிரசித்தி பெற்ற கொழும்பு ரோயல் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 73 ஆவது பிரெட்பி கேடயத்தின் இரண்டாம் கட்டத்திலும் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றியீட்டியது.

கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா 03 புள்ளிகளை சுவீகரித்து சமநிலை வகித்தன.

தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்திய கொழும்பு ரோயல் கல்லூரி அணி இரண்டாம் பாதியில் மேலும் 10 புள்ளிகளைப் பெற்றது.

இதன்போது கண்டி திரித்துவக் கல்லூரி அணி மேலும் 05 புள்ளிகளை மாத்திரமே பெற்றது.

இதனடிப்படையில், இந்தப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 13 – 08 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரெட்பி கேடய வரலாற்றின்படி இரண்டு கட்டங்களின் முடிவில் அதிகப் புள்ளிகளை ஈட்டுகின்ற அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

இரண்டு கட்டங்களின் முடிவில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 35 புள்ளிகளை ஈட்டிக்கொண்டதோடு, கண்டி திரித்துவக் கல்லூரி அணி 25 புள்ளிகளை மாத்திரமே பெற்றிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்