வடமராட்சி கிழக்கில் கொள்ளைச் சம்பவங்கள்: பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

வடமராட்சி கிழக்கில் கொள்ளைச் சம்பவங்கள்: பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

வடமராட்சி கிழக்கில் கொள்ளைச் சம்பவங்கள்: பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2017 | 8:11 pm

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று (02) நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டில் நால்வர் இருந்துள்ளதுடன், வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு – தாளையடி பகுதியிலுள்ள வீட்டிலும் நேற்றிரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு வேறு கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்ற வீடுகளுக்கிடையிலான தூரம் சுமார் 4 கிலோமீற்றர் என நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்