மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2017 | 3:41 pm

திருகோணமலை – பெருவெளி பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவு, பெருவெளி பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்றைய தினமும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்