சீரற்ற வானிலை தொடர்வதால் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற வானிலை தொடர்வதால் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2017 | 3:27 pm

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் மழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நானுஓயா – கிளாசோ – மத்தியப்பிரிவு தோட்டத்தில் நேற்று முன்தினம் (01) இரவு பெய்த மழையினால் மதிலொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் இரண்டு வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன், 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன், நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக இவர்களுக்கான உலர் உணவுகள் வழங்கப்படுகின்றன.

அக்குரஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் பாலட்டுவ பிரதேசத்தின் ஜெயந்தி சந்தி தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்