விமானத்தை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

விமானத்தை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

விமானத்தை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 3:53 pm

அவுஸ்திரேலியாவிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட இலங்கையரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து அவரின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி நேற்று முன்தினம் (31) பயணித்த MH 128 விமானத்தைத் தகர்க்கப் போவதாக குறித்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

வெடிகுண்டு மூலம் விமானத்தை தகர்க்கப்போவதாகத் தெரிவித்து குறித்த பயணி அச்சுறுத்தியுள்ள போதிலும் அவர் கையில் இலத்திரனியல் உபகரணத்தை வைத்தே அச்சுறுத்தியுள்ளதாக மலேசிய பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பயணி மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் விமானம் பாதுகாப்பாக மலேசியாவில் தரையிறக்கப்பட்டது.

குறித்த பயணி அதிக மது போதையில் இருந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்