மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 36 பேர் பலி

மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 36 பேர் பலி

மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 36 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 4:57 pm

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நட்சத்திர விடுதிக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நட்சத்திர விடுதிக்கு அந்நபர் தீ வைத்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.

பின்னர், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதிக்குள் இருந்து 36 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

புகைமூட்டத்தால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணமாகும்.

இது தீவிரவாதிகளின் தாக்குதல் இல்லை என்றும் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர் விடுதிக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCTV கெமராவில் பதிவாகியுள்ள அந்த நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்