புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: கணவர் கைது

புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: கணவர் கைது

புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: கணவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 6:27 pm

புத்தளம் – விருதோடை, நாலிந்தூவ பகுதியில் 19 வயதான இளம்பெண் எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாலிந்தூவ பகுதியில் கணவரால் எரியூட்டப்பட்ட 19 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

6 மாதக் குழந்தையின் தாயான யேஷியாமிலா சொப்னா எனும் குறித்த பெண் எரிகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சந்தேகநபரான அவரது கணவர் வீட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் விசாரணைக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்