நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 4:22 pm

நாட்டில் சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததையடுத்து, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களில் 27 வீதமாகக் காணப்பட்ட நீர்மட்டம் தற்போது 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

அதற்கமைய, தற்போது நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்