நந்திக் கடலில் கரையொதுங்கும் இலட்சக்கணக்கான மீன்கள் (Video)

நந்திக் கடலில் கரையொதுங்கும் இலட்சக்கணக்கான மீன்கள் (Video)

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 6:11 pm

முல்லைத்தீவு – நந்திக்கடல், வட்டுவாகல் களப்பு பகுதியில் பல இலட்சம் மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

மீன்கள் இலட்சக்கணக்கில் கடந்த இரண்டு நாட்களாகக் கரையொதுங்குவதாகவும் இதன் காரணமாக நந்திக்கடலை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் பதிவான போதிலும், தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருகோணமலை மூதூர் கடற்கரைப் பகுதியில் ஓங்கில் இன மீன்கள் பல கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்