தெற்கிற்கு உதவிக்கரம் நீட்டிய வடக்கு மக்கள்

தெற்கிற்கு உதவிக்கரம் நீட்டிய வடக்கு மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 7:39 pm

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென் மாகாண மக்களுக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

வட மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை தெற்கிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வை அடுத்து நிவாரணப் பொருட்கள் இன்று முற்பகல் தெற்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் 5 லொறிகளில் முப்படையினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களை தெற்கிற்கு அனுப்பி வைப்பதனூடாக வடக்கிற்கும் தெற்கிற்குமான புரிந்துணர்வு மேலும் கட்டியெழுப்பப்படும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்