திருச்சியில் கைதான ஆவா குழுவின் முக்கிய நபர்கள் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்

திருச்சியில் கைதான ஆவா குழுவின் முக்கிய நபர்கள் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்

திருச்சியில் கைதான ஆவா குழுவின் முக்கிய நபர்கள் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 3:30 pm

தமிழகத்தின் திருச்சியில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை திருச்சியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்டெனிஸ்லாஸ் தெரிவித்தார்.

இவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மன்னாரிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக திருச்சிக்கு சென்ற நிலையில், குறித்த இருவரும் கடந்த 31 ஆம் திகதி மாலை கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்த 23 வயதான இரண்டு இளைஞர்களே திருச்சியில் கைது செய்யப்பட்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக 14 சம்பவங்கள் தொடர்பில் கொலை, கொள்ளை, காயப்படுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர் என கூறப்படும் மற்றுமொரு இளைஞர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்