சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 கானா, நைஜீரிய புகலிடக் கோரிக்கையாளர்கள்

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 கானா, நைஜீரிய புகலிடக் கோரிக்கையாளர்கள்

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 கானா, நைஜீரிய புகலிடக் கோரிக்கையாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 5:28 pm

சஹாரா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கானா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 50 பேர்  லிபியாவிற்கு சஹாரா பாலைவனத்தின் ஊடாகப் பயணித்த போது பாலைவனத்தின் நடுவில் வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது.

அவர்கள் கொண்டு சென்ற குடிநீர் தீர்ந்ததால் பாலைவனத்தில் சிக்கித் தவித்துள்ளனர்.

சிலர் வேகமாக நடந்து சென்று அருகிலிருந்த கிராமம் ஒன்றை அடைந்து, நிலைமையை அங்குள்ளவர்களுக்கு விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து, செஞ்சிலுவை சங்கத்தினர் அங்கு சென்ற போது, உயிரிழந்த 44 பேரின் உடல்களை மட்டுமே மீட்கக்கூடியதாக இருந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்