இலங்கையிலிருந்து தங்கம் கடத்தல்: இராமேஸ்வரத்தில் மூவர் கைது

இலங்கையிலிருந்து தங்கம் கடத்தல்: இராமேஸ்வரத்தில் மூவர் கைது

இலங்கையிலிருந்து தங்கம் கடத்தல்: இராமேஸ்வரத்தில் மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 3:04 pm

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 13.8 கிலோகிராம் தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 7 கிலோகிராம் தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 6.4 கிலோகிராம் தங்கத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்ச்சியாகத் தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராமநாதபுரம் சுங்கத் திணைக்களத்தில் சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவர்கள் தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்