அனர்த்தங்களால் 208 பேர் உயிரிழப்பு; 92 பேர் காணாமற்போயுள்ளனர்

அனர்த்தங்களால் 208 பேர் உயிரிழப்பு; 92 பேர் காணாமற்போயுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 7:54 pm

வௌ்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட 65 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 208 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 92 பேர் காணாமற்போயுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆறு இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்