சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்

சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

01 Jun, 2017 | 9:14 pm

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறு நாடுகளின் தூதுவர்கள் இன்று கொழும்பு – தெவடகஹ பள்ளிவாசலுக்கு சென்று சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாக நாட்டில் சிறுபான்மை இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர்கள் இதன்போது கேட்டறிந்து கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்