சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video)

சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video)

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2017 | 10:35 pm

சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன.

சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்