வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 5:03 pm

அதிக மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

புலத்சிங்கள மற்றும் பதுரெலிய ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்