சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 9:01 pm

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பபட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் வஜிர அபேவர்தன, மற்றும் ஜனாதிபதி செயலாளரை பி.பீ அபயகோன் ஆகியோருக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நலன்புரி விடயங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான நிதியை, நிதியமைச்சினூடாக பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்த அனைவரதும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி , அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்