களுத்துறையில் மண்சரிவு – 8 பேர் பலி

களுத்துறையில் மண்சரிவு – 8 பேர் பலி

களுத்துறையில் மண்சரிவு – 8 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 11:15 am

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை கொபவக்க கந்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மாவத்த வத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு விமானப்படையின் விசேட ஹெலிகெப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்தில் 60 தொடக்கம் 70 கிலோமீ்றறர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அமையலாம் என்பதால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்