இரத்தினபுரி நகரில் பாரிய வௌ்ளப்பெருக்கு. மண்சரிவு காரணமாக 10 பேர் பலி

இரத்தினபுரி நகரில் பாரிய வௌ்ளப்பெருக்கு. மண்சரிவு காரணமாக 10 பேர் பலி

இரத்தினபுரி நகரில் பாரிய வௌ்ளப்பெருக்கு. மண்சரிவு காரணமாக 10 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 11:42 am

கடந்த சில மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி நகரில் பாரிய வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

களுகங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இரத்தினபுரி நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு உடனடியாக படகுகள் தேவைப்படுவதாக மாவட்ட மேலதிக செயலாளர் கேரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் ஐந்து இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது பத்துப் பேர் பலியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி பகுதியில் கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் பாரிய வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்