ஆறுகளை அண்மித்து வாழும் மக்களை உடனடியாக  வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஆறுகளை அண்மித்து வாழும் மக்களை உடனடியாக  வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஆறுகளை அண்மித்து வாழும் மக்களை உடனடியாக  வெளியேறுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 2:17 pm

சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களை உடனடியாக தமது இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வௌ்ள அபாயம் நிலவும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி அந்த பாடசாலைகளில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை தங்கவைப்பதற்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்