79,325 ஏக்கர் காணி விடுவிப்பு; முல்லைத்தீவில் 100 ஏக்கர் காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

79,325 ஏக்கர் காணி விடுவிப்பு; முல்லைத்தீவில் 100 ஏக்கர் காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

79,325 ஏக்கர் காணி விடுவிப்பு; முல்லைத்தீவில் 100 ஏக்கர் காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 3:53 pm

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த 79,325 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

இவற்றுள் 54,945 ஏக்கர் காணி அரசாங்கத்தின் காணியென அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஆர்.ராஜபக்ஸ தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் தனியாரின் 24,380 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முல்லைத்தீவில் 100 ஏக்கர் நிலப்பரப்பை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியாரின் 6000 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

இவற்றில் தெரிவு செய்யப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கவுள்ளதாக மேலதிக செயலாளர் பி.ஆர்.ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

விடுவிக்க முடியாத காணிகளின் உரிமையாளருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்