ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடு: வழிநடத்திய குற்றச்சாட்டில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய கைது

ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடு: வழிநடத்திய குற்றச்சாட்டில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய கைது

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 8:22 pm

வெலிவேரிய – ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இராணுவ வீரர்களை வழிநடத்திய குற்றச்சாட்டில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 14 வயது பாடசாலை மாணவரும் அடங்குகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் மூன்று பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இன்று கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்