நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சசி வீரவன்சவின் ஆவணங்களைக் காணவில்லை

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சசி வீரவன்சவின் ஆவணங்களைக் காணவில்லை

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சசி வீரவன்சவின் ஆவணங்களைக் காணவில்லை

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 7:51 pm

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சசி வீரவன்சவின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை என்பன காணாமற்போனமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டுக் கடவுச்சீட்டை தயாரித்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்காக சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை என்பனவற்றை நீதிமன்றம் பொறுப்பேற்றிருந்தது.

இந்த வழக்கின் ஆதாரங்களான இந்த இரண்டு ஆவணங்களும் காணாமற்போயுள்ளமை வழக்கிற்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து, இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரதி சொலிஸிட்டர் நாயகம் திலிப பீரிஸ் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்