நாட்டின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின: பலப்பிட்டியவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

நாட்டின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின: பலப்பிட்டியவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

நாட்டின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின: பலப்பிட்டியவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 3:12 pm

நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

அதிக மழை காரணமாக மகுரு கங்கை பெருக்கெடுத்ததால் மத்துகம – கலவான பிரதான வீதியின் சில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

அம்பலாங்கொடையில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக அந்த பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி – அலுத்வத்தை 30 வீட்டுத்திட்டம் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் வீடொன்றின் மீது மதில் சரிந்து வீழ்ந்தமையினால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் நுகதுவ பிரதேசத்தில் சில வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இன்று காலை 8.30 வரையிலான 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி பலப்பிட்டியவில் பதிவாகியுள்ளது.

பலப்பிட்டியவில் 197.05 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தோடு, காலியில் 158.4 மில்லிமீ்ட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பத்தேகம பிரதேசத்தில் 155.3 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தோடு, நோர்டன் பகுதியில் 128 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட, இம்புல்பே, அயகம உள்ளிட்ட பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய மற்றும் தெஹியோவிட்ட பிரதெச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீரேந்து பகுதிகளில் வாழும் மக்களையும் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்