தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 10:25 pm

தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பில் தினமும் ஐந்து முறைப்பாடுகள் கிடைப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

எனினும், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போதுமான சட்டங்களோ வசதிகளோ இல்லையென திணைக்களம் குறிப்பிட்டது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இணையத்தள விசாரணைப் பிரிவிற்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துடன், அரச நிறுவனமான கணனி அவசரப் பிரிவிற்கு கடந்த நான்கு மாத காலத்தில் 1100 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாமை பாரிய சவாலாக இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

தற்போது காணப்படும் சட்டங்களுக்கு ஏற்ப, கடும் நடவடிக்கை எடுக்க முடியாமையே மற்றைய பிரச்சினையாகும்.

பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமையினால் அவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்