ஞானசார தேரரைக் கைது செய்ய நடவடிக்கை

ஞானசார தேரரைக் கைது செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 8:51 pm

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் புதுக்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அவற்றை நிராகரித்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்