சாக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது: ஆய்வில் தகவல்

சாக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது: ஆய்வில் தகவல்

சாக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 5:40 pm

சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55,000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் தினசரி உணவுடன் சாக்லெட் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அவர்களது உடல் நலம் குறித்த ஆரோக்கியம் தினமும் கண்காணிக்கப்பட்டது.

அதில் சாக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக்கொண்டவர்களின் இரத்த ஓட்டம் சீரானமையும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியில் சாக்லெட் ஈடுபட்டமையும் உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களுக்கு சாக்லெட் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்