அரசியல் கைதிகளின் விபரங்களைக் கோரி கடிதம் கையளிப்பு

அரசியல் கைதிகளின் விபரங்களைக் கோரி கடிதம் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 9:00 pm

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களைக் கோரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் இன்று கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப தற்போது சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரியுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு சென்ற இவர்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமது குடும்பத்துடன் இணைந்து மகிழ்சியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இன்றும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் வாழ்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்