மாவனெல்ல மண்மேடு சரிவில் இருவர் உயிரிழப்பு

மாவனெல்ல மண்மேடு சரிவில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2017 | 10:12 pm

மாவனெல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படும் கட்டிடமொன்றிற்கு அருகில் சரிந்து வீழ்ந்த மண்மேட்டில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரியங்கனி பெத்தன்கொட தெரிவித்தார்.

அரநாயக்க மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்களே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவனெல்ல பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

பொறியியலாளரின் ஆலோசனையின்றி குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினர் குறித்த பகுதியில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாவனெல்ல பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், மாவனெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்