வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 8:44 pm

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

வௌ்ளவத்தையிலுள்ள ஐந்து மாடிக் கட்டுடம் கடந்த வியாழக்கிழமை சரிந்து வீழ்ந்ததில், மூவர் உயிரிழந்தனர்

கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

சரிந்துவீழ்ந்த கட்டிடம் தொடர்பில் களுபோவில திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்