வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய அம்சம்

வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய அம்சம்

வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய அம்சம்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 6:36 pm

உலக அளவில் தற்போதைய புள்ளிவிபரப்படி 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.

பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது வட்ஸ்அப் நிறுவனம்.

அந்த வரிசையில் தற்போது வட்ஸ்அப்பில் புதிய அம்சமாக ”பின்சாட்” (PIN CHAT) என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக வட்ஸ்அப் சாட்டிங்கில் தனிநபர் சாட்டிங் மற்றும் குரூப் சாட்டிங் வசதி உள்ளது, நமக்கு பிடித்தமான 3 நண்பர்களையோ அல்லது மூன்று குழுக்களையோ பின்சாட்டின் வசதி மூலம், சாட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வசதியை மிக எளிதாக பயனாளர்கள் தங்களது வட்ஸ்அப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

பயனாளர்கள் முதலில் தங்களது வட்ஸ்அப்பை ப்லேஸ்டோரில் சென்று அப்டேட் செய்துகொள்ள வேண்டும், பின்னர் வட்ஸ்அப்பில் தங்களுக்கு விருப்பமான 3 நண்பர்களின் அல்லது குழுக்களின் சாட்டிங்கை சிறிது நேரம் அழுத்திப் பிடித்து, பின்னர் மேலே உள்ள “பின்சாட்”ஐ தெரிவு செய்யவும்.

அவ்வளவுதான் பின்சாட் வசதி உங்கள் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டிருக்கும், பின்சாட்டின் மூலம் 3 நண்பர்களையோ அல்லது குழுக்களையோ தான் பின் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்