மட்டக்களப்பில் வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பில் வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 6:00 pm

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலமொன்றில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த மண்டபம் இடிந்து வீழந்ததில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நால்வர் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனையவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

நிர்மாணப்பணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே கட்டடம் சரிந்து வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்