புத்தளத்தில் கணவரால் எரியூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புத்தளத்தில் கணவரால் எரியூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 9:03 pm

புத்தளம் – விருதோடை – நாலிந்தூவ பகுதியில் கணவரால் எரியூட்டப்பட்ட 19 வயது யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

6 மாத குழந்தையின் தாயான யேஷ்சியாமிலா சொப்னா எனும் 19 வயதுடைய தாய் எரிகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சைபெற்று வந்தார்.

கடந்த 5 ஆம் திகதி கணவரால் இவர் எரியூட்டப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 14 நாட்கள் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

பெண்ணிண் கணவரும், அவரின் தந்தையும் இணைந்தே சாமிலாவை எரியுட்டிள்ளதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகபரான பெண்ணின் கணவன் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரியூட்டப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்ந்தும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக இரண்டு விசாரணைக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்