கந்தப்பளையில் சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

கந்தப்பளையில் சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 4:28 pm

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி இன்று (21) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கந்தப்பளை நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

பார்க் தோட்ட மக்கள் மற்றும் கந்தப்பளை நகர மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி இன்று ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்