அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2017 | 8:35 pm

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

நாளை காலை 8 முதல் நாளை மறுதினம் 8 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் , புற்றுநோய் வைத்தியசாலை, முப்படை வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்